| 245 |
: |
_ _ |a திருப்புளிங்குடி காய்சினவேந்தப் பெருமாள்கோவில் - |
| 246 |
: |
_ _ |a காய்சினவேந்தப் பெருமாள்கோவில் |
| 520 |
: |
_ _ |a இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது. (பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக் கமலத்திலிருந்துசெல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்) நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம் சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும். நம்மாழ்வாரின் பாசுரத்தைக் கூர்ந்து நோக்கினால் மேற்சொன்ன வரலாறு அனைத்தும் அதில் பொதிந்துள்ள நிலையைக் கண்ணுறலாம். நம்மாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசமாகிறது. இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய (நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக்கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும் கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்” என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள். ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி) அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும் கோரினார்) |
| 653 |
: |
_ _ |a கோயில், வைணவம், திவ்யதேசம், மங்களாசாசனம், 108 திருப்பதி, வைணவத்தலம், திருப்புளிங்குடி, காய்சினவேந்த பெருமாள் |
| 700 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 710 |
: |
_ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பாண்டிய, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| 909 |
: |
_ _ |a 2 |
| 910 |
: |
_ _ |a 108- திவ்ய தேசங்களில் ஒன்று. நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம். |
| 914 |
: |
_ _ |a 8.6398 |
| 915 |
: |
_ _ |a 77.9328 |
| 916 |
: |
_ _ |a காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) |
| 917 |
: |
_ _ |a பூமிபாலர் |
| 918 |
: |
_ _ |a மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லி |
| 923 |
: |
_ _ |a இந்திர தீர்த்தம், நிருதி தீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a ஆறுகால பூசை |
| 926 |
: |
_ _ |a திருப்புளிங்குடி காய்சினவேந்த பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா வருவார். ஐந்தாம் நாளில் கருடசேவையும், வாகன புறப்பாடும் உண்டு. 9–ம் நாள் திருவிழா அன்று காலை 8 மணிக்கு பல்லக்கில் சுவாமி மாடவீதி புறப்பாடும், 10 மணிக்கு சன்னியில் இருந்து தோளுக்கினியான் வாகனத்தில் தெப்ப மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கும். |
| 929 |
: |
_ _ |a இங்குள்ள இலக்குமி தேவி, பூமிப்பிராட்டி, நாச்சியார்களின் திருவுருவங்கள் வேறெங்கும் காணமுடியாத அளவிற்கு மிகமிகப் பெரியவைகள். புளிங்குடிவல்லியென்ற சிறிய உற்சவப் பிராட்டியுமுண்டு. புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம். |
| 930 |
: |
_ _ |a இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தாலும், தாமிரபரணி ஸ்தல புராணத்தாலும் அறிய முடிகிறது. ஒருசமயம் மஹாவிஷ்ணு இலக்குமி தேவியுடன் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் அழகழகாக வரிசைக்கிரமமாக மணல்மேடு அமைந்துள்ள பகுதியில் சற்றே உல்லாசத்துடன் தனித்திருக்க, இப்பூவுலகில் வந்ததும் தன்னை விட்டுவிட்டு இலக்குமி தேவியுடன் இவர் மகிழ்வெய்தியுள்ளாரே என்று எண்ணி பொறாமை கொண்ட பூமிப்பிராட்டி மிகவும் சினங்கொண்டு பாதாள லோகம் புக்கு மறைய உலகம் வறண்டு இருளடைய தேவர்கள் எல்லாம் இந்நிலை மாறவேண்டுமென ஸ்ரீமந் நாராயணனைத் துதிக்க அவரும் பாதாள லோகம் சென்று பூமிப்பிராட்டியைச் சமாதானப்படுத்தி இருவரும் தமக்குச் சமமே என உபதேசம் செய்து இருவருக்கும் நட்பு உண்டாக்கி, அவ்விரண்டு தேவிமார்களும் சூழ இவ்விடத்தில் காட்சி தந்தார். பூமியைக் (பூமிப் பிராட்டியைக்) காத்ததாலும் பூமிபாலர் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்று. காசினி வேந்தர் என்ற சொல்லே நம்மாழ்வாரின் பிற பாக்களில் காய்சின வேந்தர் என்று பயின்று வருகிறது. இத்தலத்தில் நடைபெற்ற இன்னொரு புனித வரலாற்றையும் புராணம் பேசுகிறது. யக்ஞசர்மா என்னும் அந்தணன் தனது பத்தினியுடன் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கையில், வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது ரிஷிகள் புடைசூழ வந்தவிடத்து அவர்களை மதியாதிருந்ததோடு, தட்சிணையுங்கொடுக்காது அவர்களை தீச் சொற்களால் நிந்தனையும் சய்வித்தான். அக்கணமே அம் முனிவர்கள் அனைவரும் யக்ஞசர்மாவை ஓர் அரக்கனாகும்படி சபிக்க, தன் நிலை மாறிய அவ்வந்தணன், அம்முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து சாப விமோசனமும் வேண்டி நின்றான். அதற்கு முனிவர்கள் இத்திருத்தலத்தில் பின்னொரு காலத்தில் இந்திரன் யாகம் செய்வான். அப்போது அந்த யாகத்தை அழிக்க நீ எத்தனிக்கும் போது திருமாலின் கதையால் அடிபட்டுசாபவிமோசனம் பெறுவாய் என்றனர். இஃதிவ்வாறிருக்க, இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் இனிதே குலாவிக் கொண்டிருக்கும்போது அத்தடாகத்துக்கு அருகில் மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதைத் தீர்ப்பதற்கு கண்ட விடமெங்கும் பைத்தியன்போல் இந்திரன் அலைந்தான். இதைக்கண்டு மிகவும் மனம் நொந்த தேவர்கள் தமது குலகுருவான வியாழபகவானைச் சரணடைந்து ஆலோசனை கேட்க, அவர், இந்திரனைத் திருப்புளிங்குடிக்கு அழைத்து வந்து பயப்பக்தியுடன் பூமிபாலரை வணங்கி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடச் செய்ததும் பிரம்மஹத்தி தோஷம் இந்திரனைவிட்டு நீங்கியது. இந்த தீர்த்தத்துக்கும் இந்திர தீர்த்தம் என்ற பெயர் நிலைத்தது. தனது சாபவிமோசனத்தால் மிகவும் மகிழ்ந்த இந்திரன். திருமாலுக்கு நன்றிசெலுத்தும் முகத்தான் இங்கு மிகப் பெரிய யாகம் துவங்கினான். அப்போது அரக்கனுருவில் உள்ள யக்ஞசர்மா திருமாலைக் குறித்து உள்ளுருகி வேண்டி கடுந்தவம் புரிந்து கண்ணீர் சிந்தி நின்றான். அப்போது யாக குண்டலியில் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன் தனது கதையினால் அவ்வரக்கனை அடித்து வீழ்த்த அவன் சாப விமோசனம் பெற்றான். |
| 932 |
: |
_ _ |a சயனத் திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a திருச்செந்தூர், வரகுணமங்கை |
| 935 |
: |
_ _ |a ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில், ஸ்ரீ வரகுணமங்கையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்புளிங்குடி காசினிவேந்தன் திருக்கோவில். |
| 936 |
: |
_ _ |a காலை 8.00 -12.00 முதல் மாலை 1.00-6.00 வரை |
| 937 |
: |
_ _ |a திருப்புளிங்குடி, வரகுணமங்கை |
| 938 |
: |
_ _ |a திருச்செந்தூர் |
| 939 |
: |
_ _ |a மதுரை |
| 940 |
: |
_ _ |a திருச்செந்தூர் விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000147 |
| barcode |
: |
TVA_TEM_000147 |
| book category |
: |
வைணவம் |
| cover images TVA_TEM_000147/TVA_TEM_000147_தூத்துக்குடி_திருப்புளிங்குடி-பெருமாள்-கோயில்-முகப்பு-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000147/TVA_TEM_000147_தூத்துக்குடி_திருப்புளிங்குடி-பெருமாள்-கோயில்-முகப்பு-0001.jpg
TVA_TEM_000147/TVA_TEM_000147_தூத்துக்குடி_திருப்புளிங்குடி-பெருமாள்-கோயில்-உற்சவர்-0002.jpg
cg102v024.mp4
|